துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் - டிசம்பர் 19-ந்தேதி நடக்கிறது
துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் ஏலம் வரும் டிசம்பர் 19-ந்தேதி நடைபெற உள்ளது.
மும்பை,
17 வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19-ந்தேதி துபாயில் நடந்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் நடக்கும் முதல் ஐ.பி.எல். ஏலம் இது தான். இதையொட்டி வீரர்கள் விடுவிப்பு மற்றும் தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 15-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க அணி நிர்வாகங்களுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணியும் ரூ.100 கோடி செலவிட அனுமதிக்கப்படுகிறது. அதாவது தக்க வைக்கப்படும் வீரர்களின் ஊதியம் போக மீதியுள்ள கையிருப்பு தொகையைத் தான் ஏலத்தில் மற்ற வீரர்கள் எடுக்க பயன்படுத்த முடியும். இந்த முறை பெரும்பாலான அணிகள் அதிகமான வீரர்களை கழற்றி விடமாட்டார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story