ஐ.பி.எல்; கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு


ஐ.பி.எல்; கொல்கத்தாவிற்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பந்துவீச்சு தேர்வு
x

Image Courtesy: @IPL 

தினத்தந்தி 23 March 2024 1:35 PM GMT (Updated: 23 March 2024 1:37 PM GMT)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ் செயல்பட உள்ளார்.

கொல்கத்தா,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள ஐ.பி.எல் தொடரின் 17வது சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில் தொடரில் 2வது நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்நிலையில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.


Next Story