அயர்லாந்து-வங்கதேசம் ஆட்டம் மழையால் ரத்து: உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா...!


அயர்லாந்து-வங்கதேசம் ஆட்டம் மழையால் ரத்து: உலகக்கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்ற தென் ஆப்பிரிக்கா...!
x

Image Courtesy: Twitter @ICC

தினத்தந்தி 10 May 2023 11:14 AM IST (Updated: 10 May 2023 11:14 AM IST)
t-max-icont-min-icon

அயர்லாந்து-வங்கதேசம் இடையே நேற்று நடைபெற்ற ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

செம்ஸ்போர்ட்,

அயர்லாந்து-வங்கதேசம் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேசம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 246 ரன்கள் எடுத்தது. இதையடுத்து தனது பேட்டிங்கை தொடங்கிய அயர்லாந்து 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் நடைபெறவில்லை. இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என அயர்லாந்து கைப்பற்றி இருந்தால் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தகுதி பெற்றிருக்கும்.

தற்போது வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக நடைபெறாத காரணத்தால் உலகக்கோப்பைக்குக் தென் ஆப்பிரிக்கா அணி நேரடியாக தகுதி பெற்றுள்ளது. உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8 அணிகள் தேர்வாகி உள்ளன. மீதமுள்ள 2 அணிகளை தேர்வு செய்ய ஜூன் - ஜூலை மாதங்களில் ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிசுற்றில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதி பெறும்.

உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள அணிகள்: இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா.

தகுதி சுற்றில் விளையாடும் அணிகள்: ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், நேபாளம், இலங்கை, அமெரிக்கா, யுஏஇ, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து.



1 More update

Next Story