ஹர்திக் பாண்ட்யாவுக்கு டி20ல் நிரந்தர கேப்டன் பதவியா... தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இர்பான் பதான்


ஹர்திக் பாண்ட்யாவுக்கு டி20ல் நிரந்தர கேப்டன் பதவியா... தேர்வர்களுக்கு எச்சரிக்கை விடுத்த இர்பான் பதான்
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 2 Jan 2023 2:16 PM IST (Updated: 3 Jan 2023 6:59 AM IST)
t-max-icont-min-icon

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை ஹர்திக் பாண்டியா வழிநடத்துகிறார்.

புதுடெல்லி,

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக பல மாதங்கள் ஒதுங்கியிருந்த இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, ஐபிஎல் 2022ல் பாண்டியா மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பினார்.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு தனது திறமையை வெளிப்படுத்தி பட்டத்தை வெல்ல காரணமாக இருந்தார். மேலும், ரோஹித் சர்மா இல்லாததால், நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் ஹர்திக் தலைமையிலான இந்திய அணி வென்றது.

டி20 கிரிக்கெட்டில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் தனது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அவர், கேப்டன் பொறுப்பிலும் அசத்துகிறார். இதனால், இந்திய அணியில் டி20 கேப்டன் பதவியை ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிரந்தரமாக வழங்கவேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், டி20 கேப்டன் பதவியை ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிரந்தரமாக வழங்குவது குறித்து தேர்வர்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கிறார். இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான். அவர் கூறும்போது,

கேப்டன் பொறுப்பில் ஹர்திக்கின் அணுகுமுறையால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். ஆனால் அதே நேரத்தில் நீங்கள் அவரை நீண்ட கால கேப்டனாக மாற்றினால், அவரது உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

முதுகுத்தண்டில் அவருக்கு மீண்டும் பிரச்சனை வரக்கூடும் என்பதால், ஹர்திக் பாண்டியா மீது அதிக அழுத்தம் கொடுப்பதற்கு முன்பு தேர்வாளர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

பாண்டியாவுக்கு கேப்டன் பதவியை வழங்கும்போது இதனை தேர்வாளர்கள் மனதில் கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story