ஆசிய கோப்பை போட்டியிலும் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என தகவல்...!
ஆசிய கோப்பை போட்டியிலும் கே.எல்.ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது
பெங்களூரு,
இந்திய அணியின் அதிரடி வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாட்களாக எந்தவொரு சர்வதேச மற்றும் உள்ளூர் தொடர்களிலும் விளையாடவில்லை.
நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றியவர் கே.எல்.ராகுல் .முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது காயமடைந்தார். பீல்டிங்கின்போது அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது.
கே.எல்.ராகுல் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். அவர் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்யும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் . இதனால் அவர் விரைவில் இந்திய அணியில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பை போட்டியிலும் ராகுல் விளையாடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. காயத்தில் இருந்து அவர் இன்னும் முழுமையாக குணம் அடையவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கு அவருக்கு இன்னும் அதிகமான நேரம் தேவைப்படலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.