ஆர்.சி.பி கோப்பையை வென்றால் அது ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய தருணம் - இர்பான் பதான்


ஆர்.சி.பி கோப்பையை வென்றால் அது ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய தருணம் - இர்பான் பதான்
x

image tweeted by @RCBTweets

தினத்தந்தி 12 Feb 2024 11:41 AM GMT (Updated: 12 Feb 2024 11:52 AM GMT)

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாத இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இந்திய முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஒரு முறை கூட ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை.

அந்த அணி அதிகபட்சமாக 2009, 2011 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது. ஆனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஆர்.சி.பி அணி கோப்பையை வென்றால் அது ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய தருணமாக இருக்கும் என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

ஆர்.சி.பி. மற்றும் அவர்களின் ரசிகர்களைப் போன்ற ஒரு உரிமையாளர் - ரசிகர் உறவை நான் பார்த்ததில்லை. அவர்கள் உலகம் முழுவதும் மிகவும் விசுவாசமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், அவர்கள் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை.

2016 கோலிக்கும், ஆர்.சி.பி அணிக்கும் மிகவும் சிறப்பான தொடர். வெற்றி பெறவேண்டிய வருடம் என்று நினைத்தேன். விராட் கோலியும், ஆர்.சி.பி.யும் பட்டத்தை வென்றால், அது ஆர்.சி.பி. வரலாற்றில் மட்டுமல்ல, ஐ.பி.எல். வரலாற்றில் மிகப்பெரிய தருணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story