டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - டிராவிஸ் ஹெட்


டி20 கிரிக்கெட்டில் டாப் ஆர்டரில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது - டிராவிஸ் ஹெட்
x

Image Courtesy: AFP

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.

டெல்லி,

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார்.

இதையடுத்து 267 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக ஜேக் ப்ரேசர்-மெக்குர்க் 65 ரன்கள் அடித்தார்.

இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய டிராவிஸ் ஹெட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் ஒரு வெற்றி நடையில் இருக்கிறோம். எங்கள் இளம் வீரர்கள் நன்றாக விளையாடிவருகிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். நீங்கள் நல்ல பார்மில் இருக்கும் போது மிகவும் எளிமையாக விளையாடி பந்துக்கு ரியாக்சன் கொடுத்தால் போதும்.

அபிஷேக் சர்மா பவர் பிளேவில் நன்றாக விளையாடினார். ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆக்ரோசமாக விளையாடும் அவர் தன்னுடைய வேலையை சிறப்பாக செய்தார். அவருடன் இணைந்து விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மற்ற பவுலர்களை விட நான் மிகவும் மோசமான பவுலர். எங்களுடைய அணியில் நிறைய வீரர்கள் பவுலிங் செய்கின்றனர். அதனால் இம்பேக்ட் வீரர் யார் என்பதை தேர்வு செய்வதில் சவால் இருக்கிறது.

எங்களுடைய பவுலர்களும் பவர் பிளே ஓவர்களில் கடினமான தருணத்தை எதிர்கொண்டனர். ஆனால் நாங்கள் இன்றிரவு அணியாக நல்ல வேலையை செய்தோம். நான் மீண்டும் டி20 கிரிக்கெட்டில் அதுவும் டாப் ஆர்டரில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story