ரோஹித் - கே.எல். ராகுல் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால் - கில்


ரோஹித் - கே.எல். ராகுல் சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால் - கில்
x
தினத்தந்தி 13 Aug 2023 10:25 AM GMT (Updated: 13 Aug 2023 10:38 AM GMT)

நேற்று நடைபெற்ற 4-வது டி20போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

புளோரிடா,

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகள் பெற்றுள்ளன. இதில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 178 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட்டிங் ஆடிய இந்திய அணி 17 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 179 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் 84 ரன்னும், கில் 77 ரன்னும் எடுத்தனர்.

தொடக்க விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கில் இருவரும் 165 ரன்கள் சேர்த்தனர். சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்-ராகுல் ஜோடி 165 ரன்கள் எடுத்ததுதான் அதிகபட்ச ரன்களாகும். இந்த சாதனையை ஜெய்ஸ்வால், கில் சமன் செய்துள்ளார்கள்.


Next Story