ஜெய்ஸ்வால் அபார சதம்...ராஜஸ்தான் 212 ரன்கள் குவிப்பு...!


ஜெய்ஸ்வால் அபார சதம்...ராஜஸ்தான் 212 ரன்கள் குவிப்பு...!
x

Image Courtesy: @IPL

ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் அடித்து அசத்தினார்.

மும்பை,

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெற்று வரும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோஸ் பட்லர் 18 ரன்னிலும், அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 14 ரன், தேவ்தத் படிக்கல் 2 ரன்னிலும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னிலும் அவுட் ஆகினர்.

மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து அசத்தினார். இதையடுத்து ஷிம்ரன் ஹெட்மையர் களம் இறங்கினார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நேரத்தில் ஹெட்மையர் 8 ரன்னிலும், அடுத்து களம் இறங்கிய ஜூரேல் 2 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதையடுத்து ரவிச்சந்திரன் அஷ்வின் ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 53 பந்தில் சதம் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 62 பந்தில் 124 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட உள்ளது.


Next Story