பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; நாளை மறுநாள் தொடக்கம்


பள்ளிகளுக்கு இடையிலான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; நாளை மறுநாள் தொடக்கம்
x
தினத்தந்தி 24 Dec 2023 6:00 AM IST (Updated: 24 Dec 2023 6:00 AM IST)
t-max-icont-min-icon

சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் போட்டிக்கான சீருடை மற்றும் கோப்பையை முன்னாள் வீரர் ஹேமங் பதானி அறிமுகப்படுத்தினார்.

சென்னை,

இந்தியா சிமெண்ட்ஸ் ஆதரவுடன் பள்ளிகளுக்கு இடையிலான 8-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 26-ந்தேதி முதல் ஜனவரி 26-ந்தேதி வரை சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் நடக்கிறது. 100-க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் முதல்முறையாக பிற மாநிலத்தை சேர்ந்த அணிகளும் களம் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் போட்டிக்கான சீருடை மற்றும் கோப்பையை முன்னாள் வீரர் ஹேமங் பதானி அறிமுகப்படுத்தினார். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல்அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன், இந்தியா சிமெண்ட்ஸ் அதிகாரி பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story