சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் கே.எல் ராகுல் : இங்கிலாந்து தொடரில் இருந்து விலக வாய்ப்பு


சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லும் கே.எல் ராகுல் : இங்கிலாந்து தொடரில் இருந்து விலக வாய்ப்பு
x

Image Courtesy : AFP 

காயத்தால் அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார்.

மும்பை,

மும்பை, இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியின் கேப்டனாக முதலில் நியமிக்கப்பட்டவர் தொடக்க வீரர் கே.எல் ராகுல். பின்னர் காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் இடுப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் அவதிப்பட்டு வரும் ராகுல் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லவுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார்.

அதே நேரத்தில் அதை தொடர்ந்து நடைபெறும் ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளிலும் அவர் விளையாடுவது கேள்வி குறியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து அவருக்கு ஓய்வு தேவை. அதன் பிறகும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று உடல்தகுதியை நிரூபிக்க வேண்டும். இதனால் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து முழுவதுமாக விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story