பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் ஹென்ரிச் கிளாசன் அதிரடி சதம்...!
பெங்களூரு - ஐதராபாத் இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 65வது லீக் ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றன.
இப்போட்டியில் ஐதராபாத் முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் 11 ரன்னிலும், திரிபாதி 15 ரன்னிலும் அவுட் ஆகினர். கேப்டன் மார்க்ரம் 18 ரன்னில் அவுட் ஆனார். அடுத்துவந்த ஹென்ரிச் கிளாசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 49 பந்துகளை சந்தித்த கிளாசன் சதம் விளாசினார். அவர் தற்போது 104 ரன்கள் குவித்து அவுட் ஆனார். தற்போதைய நிலவரப்படி ஐதராபாத் 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் குவித்துள்ளது.
Related Tags :
Next Story