ஐ.பி.எல். 2025: கொல்கத்தா அணியின் ஆலோசகராக சி.எஸ்.கே. முன்னாள் வீரர் நியமனம்


ஐ.பி.எல். 2025: கொல்கத்தா அணியின் ஆலோசகராக சி.எஸ்.கே. முன்னாள் வீரர் நியமனம்
x

image courtesy: AFP

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிய ஆலோசகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொல்கத்தா,

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.

ஏற்கனவே கொல்கத்தா அணியின் பயிற்சியாளர்கள் குழுவில் இருந்த கவுதம் கம்பீர், அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே உள்ளிட்டோர் இந்திய அணிக்கு பயிற்சியாளர்களாக சென்றுள்ளனர்.

இந்நிலையில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், பந்துவீச்சு பயிற்சியாளருமாகிய டுவெய்ன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.

1 More update

Next Story