கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்


கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு ரூ. 24 லட்சம் அபராதம்
x

கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ராணாவுக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதின.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா 18.3 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 1477 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைந்தது.

இந்நிலையில், இப்போட்டியில் கொல்கத்தா அணி மெதுவாக பந்துவீசியதாக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவுக்க்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இம்பேக்ட் வீரர் உள்பட கொல்கத்தா வீரர்களுக்கு அனைவருக்கும் தலா 6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


Next Story