கடைசி ஒருநாள் ஆட்டம்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா..!!


கடைசி ஒருநாள் ஆட்டம்; ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா..!!
x

image courtesy; twitter/ @ICC

தென் ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

ஜோகன்ஸ்பர்க்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-2 என தொடர் சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதையடுத்து இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக மார்க்ரம் 93 ரன்களும், டேவிட் மில்லர் 63 ரன்களும் அடித்தனர். முந்தைய ஆட்டத்தின் நாயகன் ஹென்ரிச் கிளாசன் 7 ரன்களில் ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இறுதி கட்டத்தில் மார்கோ ஜான்சன் மற்றும் பெல்லுக்வாயோ அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதில் மார்கோ ஜான்சன் 23 பந்துகளில் 47 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பெல்லுக்வாயோ 19 பந்துகளில் 39 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு 316 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜாம்பா 3 விக்கெட்டுகளும், சீன் அபோட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.



Next Story