ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 149/6


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: 4ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 149/6
x

Image Courtesy: AFP 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 475 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளை இழந்த தென் ஆப்பிரிக்கா அணி 0-2 என்ற கணக்கில் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது.

இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 4ம் தேதி சிட்னியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன் படி முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கவாஜா, வார்னர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் வார்னர் 10 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த லபுஸ்சாக்னே நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மறுமுனையில் நங்கூரம் பாய்ச்சியது போல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவாஜா சதம் அடித்து அசத்தினார். இதற்கிடையில் லபுஸ்சாக்னே 79 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் களம் புகுந்தார். கவஜா-ஸ்மித ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியனர். இதில் ஸ்மித் சதம் அடித்த நிலையில் 104 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹெட் அதிரடியாக ஆடி 70 ரன்கள் குவித்தார். இதனால் 2வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 475 ரன்கள் குவித்தது.

நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இன்று 4வது நாள் நடைபெற்றது. இரட்டை சதத்தை நெருங்கிய கவாஜா 195 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 475 ரன்னுக்கு டிக்ளேர் செய்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியில் டீன் எல்கர் 15 ரன், சாரெல் எர்வீ 18 ரன், ஹென்ரிச் க்ளாசென் 2 ரன், தெம்பா பவுமா 35 ரன், காயா ஜோண்டா 39ரன், ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இதனால் தென் ஆப்பிரிக்க்கா அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 59 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்துள்ளது.

நாளை கடைசி மற்றும் 5ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது. இன்னும் தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை முடிக்காத நிலையில் இந்த போட்டி டிராவில் முடிவடைய நிறைய வாய்ப்புகள் உள்ளனர்.


Next Story