சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து முன்னணி வீரர்


சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நியூசிலாந்து முன்னணி வீரர்
x

கோப்புப்படம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நியூசிலாந்து முன்னணி வீரர் நீல் வாக்னெர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னெர் (வயது 37). இவர் நியூசிலாந்து அணிக்காக 64 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 874 ரன்னும், 260 விக்கெட்டும் வீழ்த்தி உள்ளார்.

வரும் 29ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடும் லெவன் அணியில் நீல் வாக்னெர் இடம் பெற மாட்டார் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓய்வு முடிவை அடுத்து வாக்னெர் கூறும்போது, இந்த முடிவு எளிதானது அல்ல. அது உணர்ச்சிமிக்கது. ஆனால் முன்னேற இதுவே சரியான நேரம். பிளாக் கேப்ஸிற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு தருணத்தையும் நான் ரசித்துள்ளேன்.

மேலும் ஒரு அணியாக எங்களால் சாதிக்க முடிந்த அனைத்திலும் பெருமைப்படுகிறேன். எனது வாழ்க்கையில் கட்டமைக்கப்பட்ட நட்பு மற்றும் பிணைப்புகளை நான் மிகவும் மதிக்கிறேன். இன்று நான் இருக்கும் இடத்தில் பங்கு வகித்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story