அடுத்தடுத்து சரியும் லக்னோ விக்கெட்டுகள்... ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு...!


அடுத்தடுத்து சரியும் லக்னோ விக்கெட்டுகள்... ஆதிக்கம் செலுத்தும் பெங்களூரு...!
x
தினத்தந்தி 1 May 2023 10:32 PM IST (Updated: 1 May 2023 10:35 PM IST)
t-max-icont-min-icon

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

லக்னோ,

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்றைய 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்தது.

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் லக்னோ களமிறங்கியது. ஆனால், ஆரம்பமே லக்னோவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் வீரர் கெயில் மெயிஸ் முதல் ஓவரில் 2 பந்தை சந்தித்து ரன் எதுவும் (0) எடுக்காமல் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த குர்னால் பாண்டியா 14 ரன்னில் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான ஆயோஷ் பதோனி 4 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த தீபக் ஹூடா 1 ரன்னில் அவுட் ஆனார். பூரன் 9 ரன்னில் அவுட் ஆனார்.

தற்போதைய நிலவரப்படி 7 ஓவர் முடிவில் லக்னோ 5 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்டாய்னஸ் 8 ரன்னிலும், கவ்தம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். லக்னோ வெற்றிபெற 78 பந்துகளில் இன்னும் 89 ரன்கள் தேவை உள்ளது.


Next Story