மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அபார பந்துவீச்சு...லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி...!


மேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அபார பந்துவீச்சு...லாஸ் ஏஞ்சல்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி...!
x

Image Courtesy: @TexasSuperKings

தினத்தந்தி 14 July 2023 9:52 AM IST (Updated: 14 July 2023 10:00 AM IST)
t-max-icont-min-icon

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முகமது மோஷின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

அமெரிக்கா,

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த ஐபிஎல்-ஐப் போன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது.அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் தொடர் இன்று ஆரம்பித்தது.

அமெரிக்கன் கிரிக்கெட் எண்டர்பிரைசஸ் மூலம் நடத்தப்படும் இந்த தொடரில் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஐபிஎல்-ஐ சேர்ந்த சென்னை,மும்பை,டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளின் உரிமையாளைர்களும் அணிகளை வாங்கி உள்ளனர்.

சென்னை அணி நிர்வாகம் டெக்சாஸ் அணியையும்,மும்பை அணி நிர்வாகம் நியூயார்க் அணியையும்,கொல்கத்தா அணி நிர்வாகம் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டெல்லி அணி நிர்வாகம் சியாட்டில் அணியையும் வாங்கி உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும்,லாஸ் ஏஜ்சலஸ் நைட் ரைடர்ஸ் மோதின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணியில் டு பிளெஸ்சிஸ் டக் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய லஹிரு மிலந்தா 17 ரன்னில் அவுட் ஆனார்.

இதையடுத்து கான்வேயுடன், மில்லர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்து ரன்களை குவித்தனர். இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் கான்வே 55 ரன், மில்லர் 61 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இறுதியில் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 182 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லாஸ் ஏஞ்சலஸ் அணி ஆடியது.

லாஸ் ஏஞ்சலஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கப்தில் 0 ரன், உன்முகுந் சந்த் 4 ரன், அடுத்து களம் இறங்கிய ரீலி ரோசவ் 4 ரன், நிதிஷ் குமார் 0 ரன், மல்கோத்ரா 22 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஆண்ட்ரே ரசல் மற்றும் சுனில் நரைன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். இதில் நரைன் 15 ரன்னில் அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ரசல் அரைசதம் அடித்த நிலையில் 55 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் லாஸ் ஏஞ்சலஸ் அணி 14 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 112 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன் வித்தியாசத்தில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முகமது மோஷின் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

1 More update

Next Story