ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - தனிநபர் வழக்கு...!


ஐபிஎல் டிக்கெட் விற்பனையில் முறைகேடு - தனிநபர் வழக்கு...!
x

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக தனிநபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த முறை ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அதன்படி சென்னை, மும்பை, கொல்கதா, டெல்லி, ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், சென்னையி ல் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அசோக் சக்கரவர்த்தி என்ற நபர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளின் ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முறைகேடுகள் நடந்துள்ளன.

பெரும்பாலான டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் போட்டிகளில் ஆன்லை டிக்கெட் விற்பனை விவரங்களை தாக்கல் செய்யவும், விற்பனை குறித்த விவரங்களை சம்ர்பிக்கும்படியும் சம்மந்தபட்டவர்களுக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

1 More update

Next Story