சலூன் கடை தொழிலாளி மகன் குல்தீப் சென் - இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது முதல் போட்டியில் அறிமுகம்..!


சலூன் கடை தொழிலாளி மகன் குல்தீப் சென் - இந்திய கிரிக்கெட் அணிக்காக தனது முதல் போட்டியில் அறிமுகம்..!
x

குல்தீப் சென் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் 250வது இந்திய வீரர் என்ற புகழை பெற்றார்.

புதுடெல்லி,

இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று நடக்கிறது.

இந்த தொடரில் 26 வயதான குல்தீப் சென் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகும் 250வது இந்திய வீரர் என்ற புகழை பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் குல்தீப் சென், மணிக்கு 140 கி.மீக்கும் அதிகமான வேகத்தில் துல்லியமாக பந்துவீசும் வல்லமை வாய்ந்தவராக ஐபிஎல் போட்டிகள் மூலம் அறியப்பட்டார். எவ்வித பின்புலமுமின்றி இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு வளர்ந்த குல்தீப் சென் குறித்து காணலாம்.

மத்திய பிரதேசத்தின் ரேவா கிராமப்பகுதியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் குல்தீப் சென் தந்தை ஒரு சலூன் கடை நடத்தும் தொழிலாளி ஆவார். சென் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.அவருக்கு நான்கு உடன்பிறப்புகள் உள்ளனர். ஏழ்மை நிலையிலும் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டு சாதிக்க துடித்தார்.

சென்னிடம் இருந்த திறமையை அவரது குழந்தைப் பருவ பயிற்சியாளர் ஆரில் ஆண்டனி கண்டுபிடித்தார். அவரது ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு, இத்தகைய இளம் வேகப்பந்து வீச்சாளரைப் பயிற்றுவிப்பதற்காக பணம் எதுவும் வசூலிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார் பயிற்சியாளர் ஆரில் ஆண்டனி.அவர் சென்னுக்கு கிரிக்கெட் கிட் உபகரணங்கள் வழங்கி ஆதரவளித்தார் மற்றும் அவரது ஊட்டச்சத்தை கவனித்துக்கொண்டார்.

அதன்பின்னர் சென், 2018 ஆம் ஆண்டு ரஞ்சி டிராபியில் தேர்வாகி, 8 போட்டிகளில் 25 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.எனினும், 4 ஆண்டுகள் கழித்து 2022 ஆம் ஆண்டில், குல்தீப் சென் ராஜஸ்தான் ராயல்ஸால் ரூ.2 மில்லியனுக்கு வாங்கப்பட்டார்.

குல்தீப் சென் ராஜஸ்தான் ராயல்ஸால் ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சில ஐபிஎல் போட்டிகளே அவரை தேர்வாளர்களின் கண்பார்வையில் கொண்டு வர போதுமானதாக இருந்தது.ஐபிஎல் 2022 இல் 7 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார்.


Next Story