ஐ.பி.எல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்படும் - அருண் துமல் உறுதி


ஐ.பி.எல் 2025-க்கு முன்பு மெகா ஏலம் நடத்தப்படும் - அருண் துமல் உறுதி
x

Image Courtesy: PTI

தினத்தந்தி 10 March 2024 11:14 AM IST (Updated: 10 March 2024 11:15 AM IST)
t-max-icont-min-icon

ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன், வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் வாரியம் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வரும் ஐ.பி.எல் தொடரின் 17-வது சீசன், வரும் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. 22ம் தேதி அன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.

இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ.பி.எல் தொடர் மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் மூன்றாவது ஐ.பி.எல் தொடர் ஆகும். ஐ.பி.எல் தொடரில் வழக்கமாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மெகா ஏலம் நடப்பது வழக்கம்.

இந்நிலையில் அடுத்த வருட ஐ.பி.எல். தொடருக்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறும் என ஐ.பி.எல் தலைவர் அருண் துமல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

நிச்சயமாக நாங்கள் அடுத்த வருடம் மெகா ஏலத்தை நடத்துவோம். ஒவ்வொரு அணியும் மூன்று முதல் நான்கு வீரர்களை தக்க வைக்கலாம். இதன் மூலமாக புதிய அணிகள் உருவாக்கப்படும். இது ஐ.பி.எல் தொடரை மேலும் சுவாரசியமாக மாற்றும்.

இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஐ.பி.எல் தொடர் மூலமாக புதிய திறமைகளை நாங்கள் கொண்டு வந்ததை போலவே (உதாரணமாக ஆப்கானிஸ்தான் போன்ற நாட்டிலிருந்து கிரிக்கெட் திறமைகளை கொண்டு வந்ததை போல்) எப்பொழுதும் கொண்டு வருவோம். இதனால் எல்லா கிரிக்கெட் நாடுகளும் பலனடைந்து இருக்கின்றன.

இந்த முறை சவால் என்னவென்றால், ஜூன் முதல் வாரத்தில் டி20 உலகக் கோப்பை நடக்கிறது. எனவே நாங்கள் ஐ.பி.எல் தொடரை மே 25 அல்லது 26-ம் தேதிக்குள் முடித்தாக வேண்டும். அப்பொழுதுதான் இந்திய அணி அமெரிக்கா போன்ற ஒரு புதிய சூழ்நிலையில் சென்று தங்கி பழகி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story