காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்


காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகல்
x

காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகி உள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ், கணுக்காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஜிம்பாப்வேக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவருக்குப் பதிலாக விக்கெட் கீப்பர்-பேட்டர் ஜோஷ் இங்கிலிஸ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அடுத்த மாதம் இந்திய அணிக்கு எதிரான டி-20 சுற்றுப்பயணத்தில் மிட்செல் மார்ஷ் கலந்து கொள்வார். அதனை தொடர்ந்து வரும் டி-20 உலகக்கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த டி20 உலகக்கோப்பையில் முதல் முறையாக ஆஸ்திரேலியா வென்றது. இந்த வெற்றிக்கு 30 வயதான அவர் முக்கிய பங்காற்றினார்.

மேலும், இந்த ஆண்டு அவருக்காக பெரிய திட்டங்கள் உள்ளன. எனவே அவரை சரி செய்ய முன்னுரிமை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story