"நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம்" - நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்


நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம் - நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ்
x

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி வியப்பூட்டும் வகையில் பேட்டிங் செய்தார் என ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறினார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர்12 சுற்றில் இந்திய அணி குரூப்2-ல் அங்கம் வகிக்கிறது. தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை கடைசி பந்தில் தோற்கடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி அடுத்து நெதர்லாந்துடன் இன்று (வியாழக்கிழமை) சிட்னியில் மோதுகிறது.

இந்த ஆட்டம் குறித்து நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் கூறியதாவது;-

"உலக கோப்பை போட்டியில் விளையாட வேண்டும் என்பது கனவு. அதுவும் உலகின் புகழ்பெற்ற மைதானங்களில் ஒன்றான சிட்னியில், உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட இருப்பதை நம்ப முடியவில்லை. இந்த ஆட்டத்தை வீரர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

விராட் கோலி, பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வியப்பூட்டும் வகையில் பேட்டிங் செய்தார். அதே போன்று எங்களுக்கு எதிராக விளையாடமாட்டார் என்று நம்புகிறேன். இந்த ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற மாட்டோம் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணம். அதனால் எங்களுக்கு நெருக்கடி அதிகமாக இல்லை. முடிந்த அளவுக்கு மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களது நோக்கம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story