"இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி தான் எனது முதல் தேர்வு"- முன்னாள் பாக். வீரர் கருத்து


இந்திய அணியின் பயிற்சியாளராக தோனி தான் எனது முதல் தேர்வு- முன்னாள் பாக். வீரர் கருத்து
x

Image Courtesy: AFP

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக தோனி தான் தனது முதல் தேர்வு என முன்னாள் பாக். வீரர் தெரிவித்துள்ளார்.

கராச்சி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி கண்டு நடையை கட்டியது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணி எதிரணிக்கு நெருக்கடி அளிக்ககூட முடியாமல் சரண் அடைந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் எதிர்பார்த்த அளவு இந்த உலகக்கோப்பை போட்டியில் செயல்படவில்லை. மேலும் உலகக்கோப்பை போட்டியில் மிகவும் நெருக்கடியான தருணங்களில் பெரும்பாலான இந்தியா வீர்ரகள் சரியாக செயல்படவில்லை என இந்திய ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இதனால் அணியை வலுப்படுத்தும் விதமாக முன்னாள் கேப்டன் தோனியை மீண்டும் இந்திய அணியில் சேர்க்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக நேற்று தகவல் வெளியாகியது. எம்.எஸ்.தோனிக்கு இந்திய அணியில் மிகப்பெரிய பொறுப்பை கொடுக்க பிசிசிஐ ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக எம்எஸ் தோனி தான் தனது முதல் தேர்வாக இருப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சல்மான் பட், "இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை பொறுத்த வரை விவிஎஸ் லக்ஷ்மண் மற்றும் வீரேந்திர சேவாக் இருவரும் அற்புதமான வீரர்கள். ஆனால் தலைமை பண்பு மற்றும் தந்திரோபாய திறன் மிகவும் முக்கியமானது.

ஏனெனில் ஒரு பயிற்சியாளர் என்பவர் அணியின் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அந்த அம்சங்களில் எம்.எஸ். தோனி வெற்றியடைந்துள்ளார். இதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தோனி தான் எனது முதல் தேர்வாக இருப்பார்," என்று கூறினார்.


Next Story