மும்பை அணி சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது- முன்னாள் இந்திய வீரர் எச்சரிக்கை


மும்பை அணி சுழற்பந்துவீச்சில் பலவீனமாக உள்ளது- முன்னாள் இந்திய வீரர் எச்சரிக்கை
x

Image Courtesy: Twitter mipaltan 

மும்பை இந்தியன்ஸ் அணி சுழற்பந்து வீச்சில் பலவீனமாக உள்ளதாக இந்தியாவின் முன்னாள் வீரர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஐபிஎல் 2023 தொடருக்கான மினி ஏலம் வரும் நவம்பர் 23ம் தேதியன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த முறை கோப்பையை வெல்ல பெரும் வியூகத்தை அமைத்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெஹ்ரண்டோர்ப்-பை டிரேடிங் முறையில் மும்பை அணி வாங்கியுள்ளது.

இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அவர் மும்பை அணியில் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்தால், ட்ரெண்ட் போல்ட் இருந்த போது ஏற்படுத்திய தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் மும்பை அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் ஏற்கனவே உள்ளார்.

இந்நிலையில் மும்பை அணி சுழற்பந்து வீச்சில் பலவீனமாக உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசீம் ஜாபர் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

வேகப்பந்துவீச்சை பொறுத்த வரையில் பெஹ்ரண்டோர்ப் மற்றும் பும்ரா சிறந்த இணை தான். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் மும்பை அணிக்கு அது பெரிய பிரச்சினை.

அதே நேரத்தில் சுழற்பந்துவீச்சில் மும்பை அணி பலவீனமாக உள்ளது. மயங்க் மார்காண்டே, முருகன் அஸ்வின் உள்ளிட்ட ஸ்பின்னர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆப் ஸ்பின்னர் ஹிர்திக் சோக்கீன் மிகக்குறைவான போட்டியிலேயே ஆடியுள்ளர். மேலும் வான்கடேவில் ஆப் ஸ்பின் எடுபடாது.

இதனால் வரும் ஏலத்தில் மும்பை அணி நிச்சயம் பெரிய சுழற்பந்துவீச்சாளருக்காக பணத்தை செலவளித்தாக வேண்டும். உள்ளூர் வீரர் தேவை அதே போல அயல்நாட்டு சுழற்பந்துவீச்சாளர்களை வாங்கக்கூடாது. இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களை வாங்க வேண்டும் என வாசீம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

★ மும்பை இந்தியன்ஸ்

தக்கவைத்த வீரர்கள்: ரோஹித் ஷர்மா , இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேய சிங், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கெய்ரோன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஷ்வின், ராகுல் புத்தி, ரிலே மெரிடித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்

டிரேடிங் முறையில் வாங்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரெண்டோர்ப்

மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

மீதமுள்ள தொகை: 20.55 கோடி


Next Story