'2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை' - சுப்மன் கில்


2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை - சுப்மன் கில்
x

நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை செஞ்சுரி போட்ட முதல் வீரர் என்ற சிறப்பை சுப்மான் கில் பெற்றார்.

ஐதராபாத்,

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் சுப்மான் கில்லின் அபார இரட்டை சதத்தால் இந்திய அணி திரில் 12 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இந்திய இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 109 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆயிரம் ரன்களை கடந்தார். அவர் தனது 19-வது இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதன் மூலம் ஆயிரம் ரன்களை அதிவேகமாக தொட்ட இந்தியர் என்ற சாதனையை படைத்தார்.

அதே போல் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை செஞ்சுரி போட்ட முதல் வீரர் என்ற சிறப்பையும் சுப்மான் கில் பெற்றார். இதற்கு முன்பு சச்சின் தெண்டுல்கர் 1999-ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இது குறித்து சுப்மன் கில் கூறுகையில், "2 சதங்கள் அடிப்பது குறித்து ஆரம்பத்தில் நினைக்கவே இல்லை, ஆனால் 47-வது ஓவரில் சிக்ஸர்கள் அடித்த போது என்னால் அந்த இலக்கை அடைய முடியும் என்ற எண்ணம் தோன்றியது. இஷான் கிஷன் ஒரு சிறந்த பார்ட்னர். அவர் இரட்டை சதம் விளாசிய போது நான் அங்கு இருந்தேன். அணிக்கு நான் ஏதாவது சிறப்பாக செய்ய வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னிடம் இருந்தது. நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்தது" என்று கூறினார்.


Next Story