ரிஷப் பண்ட்-க்காக டெல்லி அணி எடுக்கும் புதிய முயற்சி....! பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் யோசனை


ரிஷப் பண்ட்-க்காக டெல்லி அணி எடுக்கும் புதிய முயற்சி....! பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் யோசனை
x

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

புதுடெல்லி,

இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற 31-ந் தேதி கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளை சேர்ந்த வீரர்களும் தயாராகி வருகின்றனர். இந்த தொடரின் முதல் போட்டியாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் ஏப்ரல் 1-ந்தேதி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை எதிர்கொள்கிறது. இதனிடையே, கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் படுகாயமடைந்து தற்போது குணமடைந்து வருகிறார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேட்பனாக டேவிட் வார்னர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், துணை கேப்டனாக அக்சர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி அணியின் கேப்டனாக உள்ள ரிஷப் பண்ட் பங்கேற்காதது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ரிஷாப் பண்ட குறித்து பேசிய டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

"ரிஷப் பண்ட் அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக திகழ்ந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப்-5 இடத்திற்குள் இருந்தவர். எங்கள் அணியின் தலைவர். மிடில் வரிசையில் 4-வது இடத்தில் பேட்டிங் செய்து ஆட்டத்தை வெற்றிகரமாக எங்களுக்கு முடித்து தரக்கூடியதில் வல்லவர். நிச்சயம் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.

ஐபிஎல் போட்டிகளின் போது ரிஷப் பண்ட் எனக்கு அருகில் அமர்ந்திருப்பார். அதுவொரு அழகான உலகம். ஆனால் அது இந்த ஆண்டு சாத்தியமில்லை என்றாலும் சாத்தியப்படக்கூடிய வழிகளில் அவரை அணியின் ஒரு பகுதியாக மாற்ற விரும்புகிறோம். அவருடைய ஜெர்சி எண்ணை எங்களது சட்டைகளிலோ அல்லது தொப்பிகளிலோ வைத்திருக்கலாம். அவர் எங்களுடன் இப்போது இல்லாவிட்டாலும், அவர் எங்கள் லீடர் என்பதை எடுத்துரைப்பதற்காக இதை செய்யலாம்.என தெரிவித்துள்ளார்.


Next Story