நாட்டிங்காம் டெஸ்ட் : ஜோ ரூட், ஒல்லி போப் சதம் - இங்கிலாந்து அணி 539 ரன்களுக்கு ஆல் அவுட்


நாட்டிங்காம் டெஸ்ட் : ஜோ ரூட், ஒல்லி போப் சதம் - இங்கிலாந்து அணி 539 ரன்களுக்கு ஆல் அவுட்
x

Image Courtesy : Twitter @ICC

14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.

நாட்டிங்காம்,

இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர்.

டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.

அந்த அணியில் ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப் 145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.

நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. தற்போது வரை அந்த அணி 1 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story