இந்திய வேகத்தில் வீழ்ந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்...தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு 109 ரன் இலக்கு ...!


இந்திய வேகத்தில் வீழ்ந்த நியூசிலாந்து விக்கெட்டுகள்...தொடரை கைப்பற்ற இந்தியாவுக்கு 109 ரன் இலக்கு ...!
x

Image Courtesy: AFP 

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

ராய்ப்பூர்,

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மாக சில வினாடிகள் யோசித்த பின்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

ரோகித் சர்மா எடுத்த முடிவு சரியா? தவறா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், அவர் எடுத்த முடிவு சரிதான் என இந்திய பந்துவீச்சாளர்கள் நிரூபித்தனர். அதாவது அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த பின் ஆலெனை ஷமி முதல் ஓவரிலேயே வீழ்த்தினார்.

இதையடுத்து களம் புகுந்த நிகோல்ஸ், டேரில் மிட்செல், கேப்டன் லதாம், மற்றொரு தொடக்க ஆட்டக்காரக் கான்வே அகியோரும் இந்திய வேகப்பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 15 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த பிரேஸ்வெல், பிலிப்ஸ் இணை சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடினர்.

அணியின் ஸ்கோர் 56 ரன்னாக உயர்ந்த போது கடந்த ஆட்டத்தில் சதம் அடித்து அசத்திய அதிரடி ஆட்டக்காரர் பிரேஸ்வெல் 22 ரன்னில் ஆட்டம் இழ்ந்தார். இதையடுத்து சாண்ட்னெர் களம் இறங்கினார். பொறுமையாக ஆடிய அவர் 27 ரன் எடுத்திருந்த நிலையில் பாண்ட்யா பந்துவீச்சில் போல்டு ஆனார். மறுமுனையில் சிறிது நேரம் தாக்குப்பிடித்து ஆடிய பிலிப்ஸ் 36 ரன்னில் கேட்ச் ஆனார்.

இறுதியில் அந்த அணி 34.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்னில் ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் பிலிப்ஸ் 36 ரன்னும், பிரேஸ்வெல் 22 ரன்னும், சாண்ட்னெர் 27 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஷமி 3 விக்கெட்டும், பாண்ட்யா, சுந்தர் தலா 2 விக்கெட்டும், சிராஜ், தாக்கூர், குல்தீப்இஅதிய் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ஆட உள்ளது.


Related Tags :
Next Story