முன்கூட்டியே ஓய்வு பெற்றதன் பின்னணியை பகிர்ந்த ஏபி டி வில்லியர்ஸ்..!


முன்கூட்டியே ஓய்வு பெற்றதன் பின்னணியை பகிர்ந்த ஏபி டி வில்லியர்ஸ்..!
x

image courtesy; AFP

ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கேப்டவுண்,

நவீன கிரிக்கெட்டில் ஹீரோவாக உருவெடுத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். எதிரணி பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை உருண்டு புரண்டு மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்டுகளை அறிமுகப்படுத்தினார்.

2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு 6 மாதங்கள் முன்பாக திடீரென்று ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பின் சில வருடங்கள் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தம்முடைய வலது கண் பார்வை மிகவும் மங்கலாக தெரிய துவங்கியதாலயே முன்கூட்டியே ஓய்வு பெற்றதாக ஏபி டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு;- "எங்கள் வீட்டில் உள்ள சிறுவன் தற்செயலாக குதிகாலால் என் கண்ணில் உதைத்தான். அதிலிருந்து நான் என்னுடைய வலது கண்ணின் பார்வையை இழக்க ஆரம்பித்தேன். அதற்காக எனக்கு அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவர் என்னிடம் எப்படி உங்களால் கிரிக்கெட்டி விளையாட முடிகிறது? என்று வியப்பாக கேட்டார். அதிர்ஷ்டவசமாக என்னுடைய கேரியரின் கடைசி 2 வருடங்களில் விளையாடுவதற்கு என்னுடைய இடது கண் உதவி செய்தது.

எனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்த 2015 உலகக்கோப்பை தோல்வியிலிருந்து வெளி வருவதற்கு நீண்ட காலங்கள் தேவைப்பட்டது. அதிலிருந்து வந்த பின் என்னால் பழைய ஆர்வத்துடன் விளையாட முடியவில்லை. இருப்பினும் 2018இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் கடைசியாக விளையாடுவோம் என்று நினைத்து விளையாடினேன். பொதுவாக என் மீது யாரும் கவனம் செலுத்துவதை நான் விரும்புவதில்லை. அதனால் கிரிக்கெட்டில் மகத்தான பெருமை கொண்ட நான் இறுதியில் நன்றி விடைபெறுகிறேன் என்ற வகையில் சென்றேன்" என கூறினார்.


Next Story