4வது டி20 போட்டி; மைதானத்தில் மின்சாரம் இல்லை...போட்டி நடைபெறுவதில் சிக்கல்..?


4வது டி20 போட்டி; மைதானத்தில் மின்சாரம் இல்லை...போட்டி நடைபெறுவதில் சிக்கல்..?
x

Image Courtesy: PTI 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது.

ராய்ப்பூர்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4வது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்த போட்டி சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் ஷாஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரு அணிகளுக்கும் முக்கியமான இந்த போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரமே இருக்கும் நிலையில், மைதானத்தின் சில பகுதிகளில் மின்சார வசதி கிடையாது எனத் தெரிய வந்துள்ளது.

மைதானத்திற்கு கடந்த 2009-ம் ஆண்டில் இருந்தே மின்சாரக் கட்டணம் செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. சுமார் 3.16 கோடி ரூபாய் மின்சாரக் கட்டணம் பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் மைதானத்தில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,இன்று நடைபெறும் போட்டியை கருத்தில் கொண்டு சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுத்த நிலையில், மைதானத்திற்கு தற்காலிகமாக மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் அமரும் கேலரிகள் மற்றும் பாக்ஸ் பகுதிகளில் மட்டுமே மின்சார வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், மின்சார விளக்குகள் ஜெனரேட்டர் மூலம் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story