ரிங்கு, கில், சாம்சனுக்கு இடமில்லை...முகமது கைப் தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை அணி


ரிங்கு, கில், சாம்சனுக்கு இடமில்லை...முகமது கைப் தேர்வு செய்த டி20 உலகக்கோப்பை அணி
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ம் தேதி தொடங்குகிறது.

மும்பை,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க இந்திய வீரர்கள் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

டி20 உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு பல இந்திய முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டும், பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என்பது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் எதிர்வரும் உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்துள்ளார். மேலும் பிளேயிங் லெவனில் யாரெல்லாம் இடம் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

டி20 உலகக்கோப்பையில் ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார். பின்னர் மூன்றாவது இடத்தில் விராட் கோலி, நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் ஹர்திக் பாண்ட்யா, 6வது இடத்தில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் ஆகியோர் இடம் பெறுவார்கள்.

பேட்டிங் ஆழத்தை அதிகரிப்பதற்காக நான் நிறைய ஆல் ரவுண்டர்களை எடுத்துள்ளேன். அந்த வகையில் அக்சர் பட்டேல் 7வது இடத்திலும், ரவீந்திர ஜடேஜா 8வது இடத்திலும் இருப்பார்கள். பின்னர் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் விளையாடுவார். கடைசியாக ஜஸ்ப்ரீத் பும்ரா, அரஷ்தீப் சிங் ஆகிய 2 பேர் வேகப்பந்து வீச்சாளர்களாக விளையாடுவார்கள்.

இந்த அணியில் நான் மேலும் ஒரு சுழற்பந்து வீச்சாளரை எடுத்துச் செல்வேன். குறிப்பாக சஹாலை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில் கடந்த முறை தேர்வான அஸ்வின் இம்முறை ஐ.பி.எல் தொடரில் பெரிய விக்கெட்டுகள் எடுக்கவில்லை.

எனவே பந்து திரும்பும் சூழ்நிலைகளில் சஹால் சிறந்தவர் என்று நான் நம்புகிறேன். அதன் பின் நல்ல பார்மில் ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் ஷிவம் துபேவை தேர்ந்தெடுப்பேன். 6 ஓவர்களுக்கு பின் அவர் போட்டியை நன்றாக வழி நடத்துகிறார்.

அதே போல தற்போது அபாரமாக விளையாடும் ரியன் பராக்கை நான் தேர்வு செய்வேன். இந்த 14 வீரர்களுடன் முகமது சிராஜ் பெயரும் இருக்கும். தற்போது பார்மில் இல்லையென்றாலும் நல்ல அனுபவத்தை கொண்டுள்ள அவர் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

முகமது கைப் தேர்வு செய்துள்ள உலகக்கோப்பை அணி;

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், ஷிவம் துபே, ரியான் பராக், முகமது சிராஜ்.

முகமது கைப் தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன்;

ரோகித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.


Next Story