இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்...ரசிகர்கள் கவலை...!


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகல்...ரசிகர்கள் கவலை...!
x

Image Courtesy: ICC Twitter

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் விலகி உள்ளார்.

மெல்போர்ன்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 9ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் ஆஸ்திரேலியா களம் இறங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது.

ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி மார்ச் 17ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. ஒருநாள் போட்டி தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜை ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலக உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. ஐபிஎல் தொடரில் மும்பை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள ஜை ரிச்சர்ட்சன் ஐபிஎல்லில் விளையாடுவாரா? இல்லையா? என்பதில் தற்போது சந்தேகம் நிலவுகிறது.



Next Story