இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!


இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ICC

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான தொடர் வரும் 22ம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறாத முன்னணி வீரர்கள் இந்திய தொடருக்கு திரும்பி உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் காயம் அடைந்த டிராவிஸ் ஹெட் அணியில் இடம் பெறவில்லை. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சீன் அப்போட், நாதன் எல்லீஸ், கேமரூன் க்ரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுசாக்னே, மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், தன்வீன் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.


Next Story