நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...!


நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அறிவிப்பு...!
x

Image Courtesy: @ICC Twitter 

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அண்களுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி டிரா ஆனது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 2ந்தேதி கராச்சியில் தொடங்கியது. இன்று 5வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த தொடருக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி முழுமையாக இழந்தது. அதனால் இந்த தொடரை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும் வரும் 9ம் தேதி முதல் இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. இந்த தொடரில் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் ஷா அப்ரிடி இடம் பெறவில்லை. பாபர் ஆசம் தலைமையிலான அணியில் டெஸ்ட் தொடரில் ஓரங்கட்டப்பட்ட ரிஸ்வான் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான பாகிஸ்தான் அணி விவரம்:-

பாபர் ஆசம் (கேப்டன்), பக்கார் ஜமான், ஹாரிஸ் ராப், ஹாரிஸ் சோஹைல், இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் ஆஹா, ஷாநாவாஸ் தஹானி, ஷான் மசூத், தயாப் தாஹீர், உசாமா மிர்.


Next Story