இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா சேர்ப்பு..!


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில்  ஜஸ்ப்ரித் பும்ரா சேர்ப்பு..!
x

Image Courtesy: @BCCI

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது.

மும்பை,

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூத்த வீரர்கள் ரோகித், விராட், கே.எல்.ராகுல் ஆகியோர் இடம் பெறவில்லை. காயம் காரணமாக கடந்த டி20 உலக கோப்பையில் இருந்து ஒதுங்கி இருந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை.

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி ஆட உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு மூத்த வீரர்களான ரோகித், கோலி ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். இந்த அணிக்கு ரோகித் தலைமை தாங்குகிறார்.

இந்த இரு தொடர்களுக்குமான இந்திய அணி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அப்போது அந்த அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம் பெறவில்லை. இந்நிலையில், இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.


Next Story