ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை முன்னாள் கேப்டன் ஷனகா நீக்கம்


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இலங்கை முன்னாள் கேப்டன் ஷனகா நீக்கம்
x

ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பல்லகெலேவில் இன்று நடக்கிறது.

பல்லகெலே,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற இலங்கை அணி அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பல்லகெலேவில் இன்று (பிற்பகல் 2.30 மணி) நடக்கிறது.

இந்த தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீபகாலமாக பார்ம் இன்றி தடுமாறி வரும் முன்னாள் கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக நீக்கப்பட்டார். ஜெப்ரி வன்டர்சே, நுவானிது பெர்னாண்டோ ஆகியோருக்கும் இடமில்லை. இவர்களுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் சமிகா கருணாரத்னே, தொடக்க ஆட்டக்காரர் ஷிவோன் டேனியல் அழைக்கப்பட்டுள்ளனர். குசல் மென்டிஸ் தலைமையிலான இலங்கை அணியில் பதும் நிசாங்கா, அசலங்கா, சமரவிக்ரமா, அவிஷ்கா பெர்னாண்டோ, தீக்ஷனா, ஹசரங்கா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர்.

1 More update

Next Story