சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய அணியை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்..!!


சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை : இந்திய அணியை பின்னுக்கு தள்ளியது பாகிஸ்தான்..!!
x

Image Courtesy : AFP 

தினத்தந்தி 14 Jun 2022 9:32 AM GMT (Updated: 14 Jun 2022 9:34 AM GMT)

இந்திய அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

துபாய்,

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4-வது இடத்தை பிடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதனால் புள்ளி பட்டியலில் அந்த அணி இந்திய அணியை விட 1 ரேட்டிங் புள்ளிகள் கூடுதலாக பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது.

இந்திய அணி 105 ரேட்டிங் உடன் 5-வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும் 2-வது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 6-வது இடத்தில் நீடிக்கிறது. வங்காளதேசம், இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Next Story