நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு - அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்கள்...!


நியூசிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு - அணிக்கு திரும்பும் சீனியர் வீரர்கள்...!
x

Image Courtesy: @ICC

தினத்தந்தி 4 April 2023 8:46 PM IST (Updated: 4 April 2023 8:49 PM IST)
t-max-icont-min-icon

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

கராச்சி,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடர்கள் வரும் 14ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடர்களுக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருந்த பாபர் ஆசம், முகமது ரிஸ்வான், பக்கார் ஜமான் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்புகின்றனர்.

டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கு பாபர் ஆசம் கேப்டனாகவும், ஷதாப் கான் துணை கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:

பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), பஹீம் அஷ்ரப், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரால்ப், இப்டிகார் அகமது, இஹ்ஸானுல்லாஹ், இமாத் வாசிம், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், நசீம் ஷா, சைம் அயூப், ஷாகின் ஷா அப்ரிடி, ஷான் மசூத், ஜமான் கான்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணி விவரம்:

பாபர் ஆசம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்துல்லா ஷபீக், பக்கார் ஜமான், ஹாரிஸ் ரால்ப், ஹாரிஸ் சோஹைல், இஹ்ஸானுல்லாஹ், இமாம் உல் ஹக், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசின் ஜூனியர், நசீம் ஷா, சல்மான் அலி ஆஹா, ஷாகின் ஷா அப்ரிடி, ஷான் மசூத், உசாமா மிர்.

ரிசர்வ் வீரர்கள்: அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, தயப் தாஹிர்.




Next Story