உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்த திட்டம்
உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்குரிய லீக் ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தானில் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கிறது. பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுத்து விட்டதால் இந்திய அணிக்குரிய ஆட்டங்களை மட்டும் பொதுவான இடத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வராவிட்டால், இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எச்சரித்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து துபாயில் சமீபத்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் விவாதித்தனர். இதில் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்குரிய லீக் ஆட்டங்களை வங்காளதேசத்தில் நடத்தலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story