வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் இனி அதிகம் நடக்கும்- நெஹ்ரா


வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் இனி அதிகம் நடக்கும்- நெஹ்ரா
x

Image : PTI 

ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது

சென்னை,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும் என குஜராத் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

எந்த ஒரு போட்டியாக இருந்தாலும் அடுத்த விஷயங்களை நோக்கி நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா மற்றும் முகமது ஷமி போன்ற வீரர்களின் அனுபவத்தை உங்களால் வாங்க முடியாது. அவர்கள் இருவரும் அணியில் இல்லாதது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. கால்பந்தில் நடப்பது போல கிரிக்கெட்டிலும் இதுபோன்று வீரர்கள் அணி மாறும் விஷயங்கள் வரும் காலங்களில் அதிகம் நடக்கும்.ஆனால், இதனை கற்றுக் கொள்வதற்கான சூழலாக எடுத்துக் கொண்டு அணியினர் முன்னோக்கி செல்ல வேண்டும். குஜராத் அணிக்காக பாண்டியாவை தொடர்ந்து விளையாட வலியுறுத்த ஒருபோதும் நான் முயற்சிக்கவில்லை. அதிகம் விளையாடினால் அதிக அனுபவத்தைப் பெற முடியும். அவர் வேறு ஏதாவது அணிக்கு செல்ல நினைத்திருந்தால் அவரை தடுத்து நிறுத்தியிருக்கலாம். அவர் மும்பை அணிக்கு சென்றதால் அதனை செய்யவில்லை.என தெரிவித்தார்.


Next Story