'டாஸ்' போட்ட பிறகு ஆடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கினால் போதும் - ஐ.பி.எல். விதிமுறையில் திருத்தம்
களம் காணும் 11 வீரர்களின் பெயர் பட்டியலை பரிமாறிக்கொள்ளும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'டாஸ்' போடுவதற்கு இரு அணி கேப்டன்களும் மைதானத்திற்கு வரும் போது, பேப்பரில் எழுதிக் கொண்டு வரும் களம் காணும் 11 வீரர்களின் பெயர் பட்டியலை பரிமாறிக்கொள்வது வழக்கம். அதன் பிறகு தான் டாஸ் போடப்படும். இந்த நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.
இதன்படி இனி 'டாஸ்' போட்ட பிறகு ஆடும் 11 வீரர்களின் பட்டியலை வழங்கினால் போதும். இதன் மூலம் முதலில் பேட்டிங்கோ அல்லது பந்து வீச்சோ அதற்கு ஏற்ப சிறந்த லெவனை தேர்வு செய்ய முடியும். அத்துடன் தாக்கத்தை ஏற்படுத்தும் சரியான வீரரை தேர்வு செய்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும்.
வருகிற 31-ந்தேதி தொடங்கும் 16-வது ஐ.பி.எல்.-ல் இருந்து புதியமுறை அமலுக்கு வருகிறது. ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவில் நடந்த எஸ்.ஏ. 20 ஓவர் கிரிக்கெட்டிலும் இந்த நடைமுறை பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story