கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு
கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கொல்கத்தா,
16-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன.
இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி, நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
Related Tags :
Next Story