அயர்லாந்துக்கு எதிரான டி20யில் இடம் மறுப்பு: ராகுல் திவாட்டியாவின் டுவீட் வைரல்

image tweeted by @rahultewatia02
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திவாட்டியாவிற்கு இடம் கொடுக்கப்படவில்லை.
அரியானா,
இந்திய அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு இரு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் 26 ஆம் தேதி மோதுகிறது. இந்தி தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ராகுல் திரப்பாட்டிக்கு முதல் முறையாக வாய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் ஆல் ரவுண்டராக வலம் வந்த ராகுல் திவாட்டியாவிற்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.
அவர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஒரு போட்டியில் கடைசி இரண்டு பந்துகளில் 12 ரன்கள் அடிக்க வேண்டிய சூழலில், தான் சந்தித்த இரு பந்தையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அணியை வெற்றிபெறச்செய்தார்.
இந்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த அவர், தற்போது இடம் கிடைக்காத ஏமாற்றத்துடன் தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் இரண்டு வாத்தைகளில் ஒரு டுவீட்டை பதிவிட்டுள்ளார். "எதிர்பார்ப்புகள் வலிக்கிறது" என்று அவர் பதிவிட்டிருந்த டுவீட்டானது தற்போது வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2020 க்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 தொடருக்கு திவாட்டியாவிற்கு அழைப்பு வந்தது, ஆனால் அந்த நேரத்தில் உடற்தகுதி தேர்வில் அவரால் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Expectations hurts
— Rahul Tewatia (@rahultewatia02) June 15, 2022






