மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா-இலங்கை ஆட்டம் மீண்டும் தொடக்கம்: ஓவர்கள் குறைப்பு


மழையால் நிறுத்தப்பட்ட இந்தியா-இலங்கை ஆட்டம் மீண்டும் தொடக்கம்: ஓவர்கள் குறைப்பு
x

மழையால் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது.

பல்லகெலே,

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே 2-வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்ய, இலங்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் சேர்த்தது.

இதனை தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணி முதல் ஓவரின் முதல் 3 பந்துகளை மட்டும் சந்தித்த நிலையில், மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் தடைபட்டது.

சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. தற்போது மழை நின்ற நிலையில், மீண்டும் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. மழையால் ஒரு மணி நேரம் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய அணி 72 ரன்களை 7.3 ஓவர்களுக்குள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story