ராஜ்கோட் டெஸ்ட் போட்டி: சாதனையை நோக்கி அஸ்வின், ஆண்டர்சன்


ராஜ்கோட் டெஸ்ட் போட்டி: சாதனையை நோக்கி அஸ்வின், ஆண்டர்சன்
x
தினத்தந்தி 15 Feb 2024 4:38 AM GMT (Updated: 15 Feb 2024 6:30 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ராஜ்கோட்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில் இந்திய ஆல்ரவுண்டர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து அனுபவ வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருவரும் சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.

இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இதுவரை 499 விக்கெட்டுகள் (97 டெஸ்ட்) எடுத்துள்ளார். இன்றைய டெஸ்டில் அவர் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி 500 விக்கெட் மைல்கல்லை எட்டும் 2-வது இந்தியர் என்ற சாதனையை படைக்கப்போகிறார்.

அதேபோல இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 41 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சனும் சாதனையின் விளிம்பில் உள்ளார். அவர் இன்னும் 5 விக்கெட் எடுத்தால் டெஸ்டில் 700 விக்கெட்டை அடைவார். ஷேன் வார்னே, முரளிதரன் ஆகியோர் மட்டுமே டெஸ்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.


Next Story