ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மயங்க் அகர்வால் இரட்டை சதத்தால் கர்நாடக அணி 407 ரன் குவிப்பு


ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: மயங்க் அகர்வால் இரட்டை சதத்தால் கர்நாடக அணி 407 ரன் குவிப்பு
x

image courtesy: BCCI Domestic twitter

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா-கர்நாடகா அணிகள் இடையிலான அரைஇறுதி ஆட்டம் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த கர்நாடகா முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மயங்க் அகர்வால் (110 ரன்), ஸ்ரீனிவாஸ் சரத் (58 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கர்நாடக அணி முதல் இன்னிங்சில் 407 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மயங்க் அகர்வால் 249 ரன்கள் (429 ரன்கள், 28 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்தார். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சவுராஷ்டிரா நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது.

நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசம்-பெங்கால் அணிகள் இடையிலான மற்றொரு அரைஇறுதி ஆட்டம் இந்தூரில் நடந்து வருகிறது. இதில் தொடக்க நாளில் 4 விக்கெட்டுக்கு 307 ரன்கள் எடுத்திருந்த பெங்கால் அணி 2-வது நாளில் 438 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய மத்தியபிரதேச அணி 2 விக்கெட்டுக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது.


Next Story