ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி: முதல் இன்னிங்சில் மும்பை 374 ரன்களுக்கு ஆல் அவுட்


ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டி: முதல் இன்னிங்சில் மும்பை 374 ரன்களுக்கு ஆல் அவுட்
x

image tweeted by @BCCI domestic

மும்பை அணி முதல் இன்னிங்சில் 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

பெங்களூரு,

ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டியில் மத்தியப்பிரதேச அணியும், மும்பை அணியும் மோதி வருகின்றன. பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி மும்பை அணி முதலில் விளையாடியது. நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. சர்ப்ராஸ் கான் 40 ரன்னுடனும், ஷம்ஸ் முலானி 12 ரன்னுடனும் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்தௌ பேட்டிங் செய்த அந்த அணி 127.4 ஓவர்களில் 374 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.

மும்பையில் அதிகபட்சமாக சர்ப்ராஸ் கான் 124 ரன்கள் எடுத்தார். ஜெய்ஸ்வால் 78 ரன்களும், கேப்டன் பிருத்வி ஷா 47 ரன்களும் எடுத்தனர். மத்திய பிரதேச அணி தரப்பில் அதிகபட்சமாக கவுரவ் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து மத்திய பிரதேச அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.


Next Story