ரஞ்சி கோப்பை இறுதிபோட்டி : மத்திய பிரதேச அணிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை


ரஞ்சி கோப்பை இறுதிபோட்டி : மத்திய பிரதேச அணிக்கு 108 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை
x

Image Courtesy : BCCI Domestic Twitter

ரஞ்சி கோப்பையை வெல்ல மத்திய பிரதேச அணி வெற்றி பெற 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

பெங்களூரு,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் மும்பை-மத்தியபிரதேச அணிகள் இடையிலான இறுதி ஆட்டம் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 374 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 177.2 ஓவர்களில் 536 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆகி 162 ரன்கள் முன்னிலை பெற்றது. மத்திய பிரதேச அணியில் ரஜத் படிதார் 122 ரன்னில் (219 பந்து, 20 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார்.

மும்பை தரப்பில் ஷம்ஸ் முலானி 5 விக்கெட்டும், துஷர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும், மொகித் அவாஸ்தி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 162 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய மும்பை அணி நேற்றைய முடிவில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்தது. ஹர்திக் தாமோர் 25 ரன்னிலும், கேப்டன் பிரித்வி ஷா 44 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அர்மான் ஜாபர் 30 ரன்களுடனும், சுவேத் பார்கர் 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது . இன்றைய நாள் ஆட்டத்தில் மும்பை சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.இதனால் அந்த அணி 269 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.மும்பை அணியில் சுவேத் பார்கர் 51 ரன்களும் ,சர்பராஸ் கான் 45 ரன்களும் ,பிரித்வி ஷா 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.மத்திய பிரதேச அணியில் குமார் கார்த்திகேயா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் .

இதனால் ரஞ்சி கோப்பையை வெல்ல மத்திய பிரதேச அணி வெற்றி பெற 108 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது


Next Story